Back    Home
ஆயுர்வேத மருத்துவம் மூலிகைப் பட்டியல்

ஆயுர்வேதம் - Ayurvedam

Botanical Name Azadirachta indica A.Juss.
Tamil Name - நாட்டுவேம்பு -Naattu vembu


குழந்தை நலம்

  • ஆயுள் விருத்தி
  • ஆயுள் விருத்தி
    1 . தோஷ நிவர்த்தி

    கடுகு, வேப்பிலை, பூர்ஜ இலை எனும் இவற்றின் தூளை நெய்யுடன் கலந்து தூபம் போட்டால் சிறுவர்களுக்குத் தோன்றும் எல்லா கிரக தோஷங்களும் நீங்கும்.



  • பலமின்மை
  • பலமின்மை
    1 . குழந்தைகளுக்கு

    வேம்பு, மாவிலங்கை இலைகளை இட்டுக் காய்ச்சிய நீரில் குளிக்கச் செய்தால் குழந்தைகளுக்கு பூதனை என்னும் கிரகத்தால் தோன்றிய துன்பம் நீங்கும்.




    பொது நலம்

  • வீக்கம் கரைய
  • வீக்கம் கரைய
    1 . வீக்கம் நீங்க

    மணித்தக்காளி இலை, முள்ளங்கி இலை வேப்பிலை எனும் இவற்றைப் பக்குவம் செய்து உட்கொண்டால் வீக்கம் நீங்கும்.




    சருமம்

  • தொழுநோய்
  • தொழுநோய்
    1 . குஷ்டம் நீங்க

    வேப்பங் கஷாயத்தைக் குளியலுக்குப் பயன்படுத்தினால் குஷ்டம் நீங்கும்.



  • புண் ஆறுவதற்க்கு
  • புண் ஆறுவதற்க்கு
    1 . புண் ஆறுவதற்கு

    கடம்பம், மருதம், வேம்பு, எருக்கன் எனும் இவற்றின் இலைகளை விரணத்தின் மேல் வைத்துக் கட்டினால் நலன் விளையும்.




    இருதயம்

  • இருதயபலம்
  • இருதயபலம்
    1 . இதய நோய் குணமாக

    வசம்பு, வேப்பங்கட்டை எனும் இவற்றின் கஷாயத்தைப் பருகச் செய்து வாந்தி எடுக்கச் செய்தால் கபத்தினால் தோன்றிய இதய நோய் குணமாகும்.



    2 . இதய நோய்குணமாக

    வேப்பங் கொட்டை, பேய்ப்பீர்க்கு விதை ஆகிய இரண்டையும் அரைத்து நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தால் வாந்தியாகி கபத்தினால் தோன்றிய இதய நோய் தணியும்.




    குடல், வயிறு

  • மஞ்சள் காமாலை
  • மஞ்சள் காமாலை
    1 . காமாலை தணிய

    வேப்பங் கட்டை கஷாயத்தில் தேன் கலந்து காலையில் உட்கொண்டு வந்தால் காமாலை தணியும்.




    விஷம்

  • நஞ்சு முறிவு
  • நஞ்சு முறிவு
    1 . தாவர நஞ்சு முறிவு

    கருங்காலி வேரையும், வேம்பின் விதையையும் துகளாக்கி வெந்நீருடன் உட்கொள்ளச் செய்தால் தாவர விஷத்தால் தோன்றிய துன்பங்கள் நீங்கும்.



    2 . நஞ்சு முறிய

    வேப்பங் கொட்டையை மைய அரைத்துச் சுடு நீருடன் உட்கொள்ளச் செய்தால் நஞ்சு உடனே நீங்கும்.